அரசியலா இது - தி.மு.க பெண் கவுன்சிலர் திடீர் ராஜினாமா பின்னணி என்ன?
தி.மு.க பெண் கவுன்சிலர் இது எனக்கான களம் அல்ல என்று கூறி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க பிரமுகரான கந்தசாமி என்பவரது மகள் நர்மதா என்பவர் ஏழாவது வார்டில் போட்டுவிட்டு 611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் நேற்று நகராட்சி ஆணையர் தானுமூர்த்தி, தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதில் அவர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக என்னால் இப்பகுதி இப்பதவியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நான் வகிக்கும் நகரமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விளக்கிக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டு ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து இருக்கிறார்.
பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறும் பொழுது, கடந்த பத்து ஆண்டுகள் ஆகவே நகராட்சி கவுன்சிலர்களாக பதவி வகித்தனர். எனது சொந்த காரணங்களுக்கான இப்பதவியில் இருந்து விலகி கடிதத்தை அளித்துள்ளேன். வரலாற்று சிறப்புமிக்க நகராட்சியில் பணியாற்ற வாய்ப்பு அளித்த மக்களுக்கும், அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்காக பணியாற்ற எனக்கு நகராட்சி கவுன்சிலர் வாய்ப்பு கிடைத்தது. அதை நான் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பிக்கை வைத்தேன். பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட நான், மக்களுக்கு என்னால் முடிந்த பணிகளை செய்வதற்கு வேறு சிறந்த களம் அமையும் என்றும், இது எனக்கான களம் அல்ல என்பதை உணர்ந்து விலகி இருக்கிறேன் என்று கூறுகிறார்.
மேலும் ராஜினாமா செய்த நர்மதா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் குரூப் 1 தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவிற்காக காத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சி நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. தி.மு.க முப்பது இடங்கள், அ.தி.மு.க மூன்று இடங்கள், மீத இரண்டு மூன்று சுயாட்சி இடங்கள் பிடித்தனர். தற்போது திமுக கவுன்சிலர் நர்மதா திடீரென ராஜினாமா செய்த தி.மு.க கவுன்சிலர்களின் எண்ணிக்கை 29 ஆக குறைந்து இருக்கிறது.
Input & Image courtesy: News