"அறங்காவலர்களை நியமிக்கும் வரை நகைகளைத் தங்க கட்டிகளாக உருக்கக்கூடாது " - தி.மு.க அரசின் திட்டத்திற்கு முட்டுக் கட்டை போட்ட உயர்நீதி மன்றம் !
இந்து கோயில் நகைகளை உருக்கும் தி.மு.க அரசின் திட்டத்தின் திருப்பு முனையாக "அறங்காவலர்கள் நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது ! " என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்து கோயில் நகைகளை உருக்கி அதை தங்க கட்டிகளாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இந்த உள்நோக்கம் கொண்ட திட்டத்தை தமிழக இந்துக்கள் எதிர்த்தனர். இந்நிலையில் " இன்டிகேட் கலெக்டிவ் " என்ற அறக்கட்டளை சென்னை உயர் நீதிமன்றத்தில் இத்திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
"கடந்த 11 ஆண்டுகளாகத் தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் தற்போது திடீரென மதிப்பீடு செய்யப்பட்டுத் தங்கக் கட்டிகளாக மாற்றப்படும் என்றும் அது வங்கிகளில் முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது அறநிலையத் துறை சட்டத்திற்கு விரோதமானது என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், அறங்காவலர்கள் பணிகள் பல இடங்களில் காலியாக இருக்கும்போது இந்தப் பணியிடங்களை நிரப்பாமல் நகைகளை மதிப்பீடு செய்வதோ அல்லது உருக்கித் தங்கக் கட்டிகளாக மாற்றுவதோ சட்டவிரோதமானது" என்றும் மனுவில் கூறியிருந்தது.
இந்த வழக்கு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் : மன்னர்கள் போன்றோர் கோயிலுக்கு வழங்கிய பாரம்பரியமான நகைகளை உருக்கவில்லை என்றும் காணிக்கையாக வந்த நகைகளை மட்டும் தான் உருக்கப் போவதாக" மழுப்பலாக தமிழக அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.
தமிழக அரசின் பதிலை உன்னிப்பாக கவனித்த நீதிமன்றம், நகைகளை கணக்கெடுக்க அனுமதி வழங்கியது, ஆனால் "அறங்காவலர்களை நியமிக்கும் வரை நகைகளைத் தங்க கட்டிகளாக உருக்கக்கூடாது " என ப்ளாராக தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
"அறங்காவலர் இல்லாமல் கோயில் நகைகளை உருக்கக்கூடாது" என்ற நீதிமன்றத்தின் உத்தரவு நகைகளை உருக்கும் இந்து விரோத தி.மு.க அரசின் திட்டத்திற்கு ஒரு மூக்கணாங்கயிறு என்றால் சொல்லலாம்.