DMK Files இரண்டாம் பாகம்.. ஆளுநரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது என்ன?
என் மண், என் மக்கள் நடை பயணத்தை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ராமநாதபுரத்தில் ஜூலை 28-ம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி சென்னையில் முடிக்கிறார். மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தப் பயணத்தைத் தொடங்கி வைக்கவிருக்கிறார். இந்தப் பயணத்துக்கு முன்பாக "திமுக ஃபைல்ஸ் 2 ஆம் பாகம்" வெளியிடப்படும் என்றும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
இது பற்றி அண்ணாமலை அவர்கள் கூறும் பொழுது, "திமுக ஊழல் பட்டியல் சம்பந்தமான DMK Files பாகம் இரண்டு தயாராக இருக்கிறது. பாத யாத்திரைக்கு முன்பு DMK Files பாகம் 2 வெளியாகும். இதில் 300-க்கும் மேற்பட்ட பினாமிகள் மூலமாக சொத்துக்குவித்த விவரங்கள் இடம்பெறுகின்றன. பினாமிகள் பெயர்களை பொதுவெளியில் சொல்வதா அல்லது ஆளுநரிடம் தெரிவிப்பதா என்பது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
திமுக ஃபைல்ஸ் முதல் பாகத்தை அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டார். இந்த நிலையில் DMK files இரண்டாம் பாகத்தை வெளியிடும் முன்பு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நேரில் சந்தித்து பேசினார். அதே நேரத்தில் DMK Files பாகத்தை ஆளுநரிடம் அண்ணாமலை ஒப்படைத்துள்ளதாகவும் அதனுடன் டாஸ்மாக் குறித்த வெள்ளை அறிக்கையையும் அவர் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Input & Image courtesy: News