3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த திமுக பிரமுகர் - நடந்த சம்பவம் வெளியில் வராமல் பார்த்துக்கொண்ட அதிர்ச்சி பின்னணி!
DMK functionary arrested for sexually abusing a 3-year-old girl
தமிழகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்ட நிலையில், மேலும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சிவக்குமார் (50) என்ற திமுக பிரமுகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரையில் வசிப்பவர் கொத்தனார் சிவக்குமார். இவர் அப்பகுதியில் திமுக பிரமுகராக உள்ளார். அவர் தனது வீட்டு பக்கத்தில் வசிக்கும் 3 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பல்லடம் மகளிர் போலீசார் குற்றம்சாட்டப்பட்ட திமுக பிரமுகரை கைது செய்தனர். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், 22 வயது கிறிஸ்தவ தலித் இளம்பெண்ணை இரண்டு திமுக நிர்வாகிகள் உட்பட 8 பேர் பல மாதங்களாக பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து ட்வீட் செய்த திமுக எம்பி கனிமொழி, இதற்கு மவுனம் காப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.