தி.மு.க அரசின் அரசாணைக்கு தடை: அதிர்ச்சியில் வேலை இல்லா பட்டதாரிகள்!

தமிழக செய்தித் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கான அரசாணைக்கு தடை விதித்த நீதிமன்றம்.

Update: 2022-09-06 00:46 GMT

தமிழக அரசின் சார்பில் செய்து துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கான அரசு பணியாளர் தேர்வாணைய மூலமாக 50 சதவீதமும், நேரடி நியமனங்கள் மூலமாக 50% நிரப்புவதற்கான அரசாணையை தி.மு.க கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி பிறப்பித்தது. இதனை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஒரு அரசாணைக்கு தற்போது தற்காலிக தடையை வழங்கியிருக்கிறது. இதன் மூலமாக இந்த செய்தியை கேட்டறிந்த வேலையில்லா பட்டதாரிகளும் அரசு பணியாளர்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.


மேலும் அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணைக்கு எதிராக தற்போது நான்கு வாரங்களுக்கு தற்காலிக தடையை அமல்படுத்தி வழக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. ஸ்டே கொடுக்கப்பட்டத்தை அறிந்த வெளியில்லா பட்டதாரிகளும் மற்றும் பலரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மேலும் திமுக அரசின் அரசாணிக்கு எதிராக மயிலாடுதுறையை சேர்ந்த மாசிலாமணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனுதாரருக்கு இந்த வழக்கை தாக்கல் செய்தவர் தி.மு.க எம்.பி வில்சன்.


இந்த வழக்கின் விசாரணையின் போது, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட்டு பிறகு பணி நிரந்தரம் செய்யப்படும் என்பதால் அரசு தேர்வாணையம் மூலம் பணி நிரந்தர நியமனங்களை மேற்கொள்ள முடியாது என்று மனுதாரர் காண ஆஜரான வழக்கறிஞர் மற்றும் எம் திமுக எம்பி ஆன வில்சன் அவர் வாதாடினார். அரசாணைகளும் போட்டுவிட்டு அதற்கு எதிராக தற்போது தேர்வு வாங்கி இருக்கிறார்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு வேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வேலையில்லா பட்டதாரிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News