தி.மு.க. அரசின் 100 நாள் சாதனை அல்ல வேதனைதான் அதிகம் ! எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!
சட்டசபையில் திமுகவை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். கொடநாடு கொலை சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக சயான் அளித்த வாக்குமூலத்தில் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
திமுக அரசு அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபையில் திமுகவை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். கொடநாடு கொலை சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக சயான் அளித்த வாக்குமூலத்தில் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இதனிடையே எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்துவது பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை. கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது.
எங்களது ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு வீடாக சென்று பரிசோதனைகளை நடத்தினோம். தற்போது திமுக நீட் விவகாரம் முதற்கொண்டு அனைத்திலும் பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது.
மேலும், திமுக அரசின் 100 நாள் சாதனையல்ல சோதனை, வேதனைதான் அதிகமாக உள்ளது. திமுக அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source: TOP NEWS
Image Courtesy:Topnewstamil
https://www.toptamilnews.com/dmk-governments-100-days-is-not-an-achievement-it-is-a-pain-is-too-much-admk-eps-harsh-criticism/