சாதி சான்றிதழ் வழங்காததால் 83வயது முதியவர் கழுத்தை அறுத்துக்கொண்டார் ! இது தான் விடியல் ஆட்சியா !

Update: 2021-10-13 10:13 GMT

சாதிச்சான்றிழ் வழங்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், 83வயதுகொண்ட  முதியவர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு !

நேற்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், திருவள்ளூர் மாவட்ட பழங்குடி கொண்டா ரெட்டீஸ் மலைஜாதி முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 200பேர், சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்டனர் .ஆனால் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில்  வருவாய் கோட்டாட்சியர் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.  

அப்போது, போராட்டத்தில்  ஈடுபட வந்த  83வயது முதியவர் பெரியசாமி கையில் இருந்த கத்தியால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டார். விரைவாக   காவல்துறையினர் முதியவரை  திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். முதியவரின் உறவினர்கள் "ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை என்று அதிர்ச்சியால் முதியவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் " என்று கூறினர்.

 83வயதுகொண்ட முதியவர் சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி  தன் கழுத்தை  அறுத்துக்கொண்டது. 6  மாத தி.மு.க ஆட்சியின் அவல நிலையை கூறும் சான்றாகும்.

News J


Tags:    

Similar News