தி.மு.க அமைச்சர் ஐ.பெரியசாமி'யின் புகைப்படம் ஒட்டப்பட்ட இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல்!

Update: 2022-01-09 09:46 GMT

திண்டுக்கல்லில், தி.மு.க மூத்த தலைவரும், அமைச்சருமான திரு. ஐ பெரியசாமி அவர்களது புகைப்படம் ஒட்டப்பட்ட இரு சக்கர வாகனத்தில்  நான்கு கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக  பலதரப்பட்ட மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழகத்தில்  கஞ்சா விற்பனை  ஏகபோகமாக நடைபெற்று வருகிறது என்ற செய்தி தமிழக மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


கஞ்சா போதைக்கு  வயதான இளைஞர்கள் மட்டும் இல்லாமல், சிறுவர்களும்  அடிமையாகி தங்களது வாழ்க்கையை கெடுத்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் அரங்கேறிய ஒரு  சம்பவம் தமிழகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.


திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ,அலங்காநல்லூரில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, கருப்பு நிறம் கொண்ட இரு சக்கர வாகனத்தில், அமைச்சர் மற்றும் தி.மு.கவின் மூத்த தலைவரான  ஐ.பெரியசாமி அவர்களது படமும், அவரது மகனும் எம்.எல்.ஏ'வுமான செந்தில்குமார் படமும்  ஒட்டப்பட்ட வாகனத்தில் 4 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.




 உடனடியாக அந்த இரு சக்கர வாகனம் பரிமுதல் செய்யப்பட்டது. 


இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் தி.மு.க'வை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் கூட்டாளிகளுடன் கஞ்சா விநியோகம் செய்து, தொழில் செய்து வந்தது தெரியவந்தது. 


ஆளும் தி.மு.க அரசு கஞ்சா போதையில் இருந்து இளைஞர்களையும், சிறார்களாயும்  மீட்க்கும்  என்று நாம்  எதிர்பார்த்து இருக்கையில், தி.மு.க பிரமுகரே  கஞ்சா கடத்த முயற்சி செய்திருக்கும் இச்செய்தியால், தி.மு.க அரசு பலத்த விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

News J

Tags:    

Similar News