ஓட்டுக்காக பார்வை இழந்த மாற்றுதிறனாளி தம்பதியினரிடம், தி.மு.க'வினர் மிரட்டல்!

Update: 2022-02-19 13:39 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில், பார்வை இழந்த மாற்றுதிறனாளி தம்பதியினரிடம்  "தி.மு.க'விற்கு வாக்களிக்குமாறு" அக்கட்சியினர் மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  


தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளை அளித்துள்ளனர். பல இடங்களில் தி.மு.க'வினர் தேர்தல் விதிமீறல்களில்  ஈடுபட்டதாக  எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில்   ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் 30'வது வார்டில் வசித்து வரும் பார்வை இழந்த மாற்றுத்திறனாளி  தம்பதியினரான  குமார் தம்பதியினரை,  அப்பகுதி தி.மு.க'வினர்  "தி.மு.க'விற்கு தங்களின்  வாக்குகளை செலுத்த வேண்டும்" என்று  மிரட்டல் விடுத்ததாக,  குமார்  குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

ஒரு மாற்றுத்திறனாளி தம்பதியினரை மிரட்டல் விடுத்து வாக்குகளை சம்பாதிப்பது எந்தவிதமான அரசியல் என்று தி.மு.க'வினர் தான் கூற வேண்டும்.

News J

Tags:    

Similar News