மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தி.மு.க: முதியவரிடம் 'வாய மூடிட்டு உட்காரு' என்ற அதட்டிய அமைச்சர் பொன்முடி!
வாயை மூடிட்டு உட்காரு என மூதாட்டி அதட்டிய தி.மு.க அமைச்சர் பொன் முடியினால் சர்ச்சையில் சிக்கும் கட்சி.
அமைச்சர்கள் என்பவர் பொதுமக்களுக்கு ஆதரவாகவும் மற்றும் அவர்களுடைய குறைகளை பொறுமையாக எடுத்து கேட்கும் குணம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஆனால் அதற்கு விதிவிலக்காக இருப்பவர் தான் தி.மு.க அமைச்சர் பொன்முடி. மக்கள் ஏதாவது ஒரு குறையை முன் வைத்தால் உடனே அவர்களை தவறான விதத்தில் பாகுபாடு பார்க்காமல் வயது, வித்தியாசம் பார்க்காமல் சரமாரியாக திட்டுவதற்கு அவரை அடித்துக் கொள்வதற்கு ஆள் கிடையாது. அந்த வகையில் பல்வேறு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் தி.மு.க அமைச்சர்களின் பட்டியலில் முதல் ஆளாக இருப்பவர் அமைச்சர் பொன்முடி அவர்கள் தான். சமீபத்தில் கூட அவர் பெண்களுக்கு இலவச பயணம் செய்வது குறித்து ஒரு கூட்டத்தில் பேசிய பொழுது 'ஓசி பஸ்லதான வந்தீங்க' என்று மிகவும் கேவலமாக கேட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து தனது தொகுதி மக்கள் போராட்டம் நடத்திய போது பேச்சு வார்த்தை நடத்த வந்த அமைச்சர் அங்கு இருக்கும் ஒரு நபரிடம் வேலையை பார்த்துட்டு போயா? என்றார். கடந்த வாரம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்க அமைச்சர் பொன்முடி வந்திருந்த போது கூட, மக்கள் குறைகளை சொல்ல அதற்கு அவர் 'அப்படியே எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க' என்று மிகவும் கடுமையாக திட்டி இருக்கிறார்.
இந்நிலையில் தான் தற்பொழுது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் பல்வேறு நலத்திட்ட பொருட்களை வழங்கினார். கூட்டத்தின் நலத்திட்ட உதவிகள் பற்றி பேசிய பொழுது அங்கு இருந்த ஒரு மூதாட்டி எழுந்து குறைகளை சொன்னார். உடனே ஆத்திரம் அடைந்த பொன்முடி அந்த பெண்ணை பார்த்து எரிச்சலுடன் சைகையில் 'கையை வைத்து வாயை மூடிட்டு உட்காரு' என்று சொன்னார்.
Input & Image courtesy: Mediyaan News