உதயநிதிக்காக 4 மணிநேரம் காக்க வைக்கப்பட்ட மாணவர்கள்: விதி மீறி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள்?
தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறப்பு விழாவின் போது அமைச்சர் உதயநிதிக்காக 4 மணி நேரமாக காத்திருந்த மாணவர்கள்.
தஞ்சாவூரில் அமைந்துள்ள அன்னை விளையாட்டு மைதானத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தற்போதைய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வருகை தர இருந்தார். இதற்காக ஊர் முழுவதும் தி.மு.க நிர்வாகிகள் சார்பில் கொடி கம்பம் மற்றும் கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் ஏராளமாக அமைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக சத்யா விளையாட்டு மைதானத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் 1,200 மீட்டர் நடைபாதை மற்றும் அலங்காரம் மின் விளக்குகள் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல் இரண்டு கோடியில் திறந்தவெளி ரோலர் ஸ்கேட்டிங் சறுக்கு தளம், டாய்லெட்டுகள், நுழைவாயில் மற்றும் வாலிபால் என பல்வேறு அம்சங்கள் மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இவற்றை திறந்து வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி மார்ச் 14ஆம் தேதி வருகை தர இருந்தார். அமைச்சரை வரவேற்பதற்காக தி.மு.கவினர் ஊர் முழுவதும் இரும்பு கம்பிகளால் கொடிகளை கட்டி இருந்தார்கள். சில இடங்களில் காற்றில் விழுந்த நிலையில் பொதுமக்கள் சாலை ஓரமாக அதை எடுத்து வைத்தும் சென்றார்கள். மேலும் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தால் பொதுமக்கள் அவதி அடைந்து கொண்டு செல்ல வேண்டிய ஒரு சூழலை ஏற்பட்டது. வழி நெடுகிலும் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு பலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மதியம் 12:30 மணிக்கு வருகை தருவதாக சொன்ன அமைச்சர் 3:00 மணிக்கு தான் வருகை தந்தார். இதனால் காலை 11 மணிக்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் சோர்வாக தரையில் அமர்ந்து இருந்தார்கள்.
இது மட்டுமில்லாமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான இளைஞர் விடுதி சேதமடைந்து இருப்பதால் அவற்றை அமைச்சர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக விடுதியின் முகப்பை முழுமையாக மறைக்கும் வகையில் ஜமுகாளம் துணி கொண்டு கட்சி பேனர்களைப் போல வைக்கப்பட்டு இருந்தது.
Input & Image courtesy: Dinamalar