தி.மு.க எம்.எல்.ஏ வரவேற்பு நிகழ்ச்சிக்காக பள்ளி மாணவர்கள் நாற்காலிகள் தூக்கிச் சென்ற அவலம் !

Update: 2021-12-25 12:05 GMT

மதுரை : சோழவந்தான் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் வருகையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிக்காக,  பள்ளி மாணவர்கள் சேர் மற்றும் மேஜைகள் தூக்கிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அனைத்து தரப்பு மக்களிடமும் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை அலங்காநல்லூர் அருகே பள்ளி மாணவர்களை திமுக எம்.எ.ல்ஏ வெங்கடேசன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக டேபிள் மற்றும் நாற்காலிகள்   தூக்கிச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஊராட்சி சோழவந்தான் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் அவர்கள் தொகுதி முழுவதும் வலம் வந்து, மக்களிடம்  கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.இவரை வரவேற்பதற்காக அந்தந்த ஊராட்சி கழக நிர்வாகிகள் இவருக்கு வரவேற்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.


இந்நிலையில்  பாரப்பட்டி கோடங்கிபட்டி  உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் வருகை தந்த போது  வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்காக அரசுப் பள்ளி மாணவர்களை சேர் மற்றும்  மேஜை தூக்கி வர வற்புறுத்தியதாக  சொல்லப்படுகிறது. அதன்படி மாணவர்களும் மேஜைகளையும் நாற்காலிகளையும் நிகழ்ச்சிக்கு தூக்கி சென்றனர். இது அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.


பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக பள்ளிக்கு சென்ற இடத்தில், அவர்களை பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவதற்காக நாற்காலிகளை  தூக்கச்  சொல்வது நியாயமில்லை  என்ற விமர்சனங்களும்  சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.




 


Tags:    

Similar News