விவசாயிகளுக்கு தண்ணீர் தராமல் மடையை அடைத்து அராஜகம் செய்யும் தி.மு.க எம்.எல்.ஏ.!
விவசாயிகளுக்கு தண்ணீர் தராமல் மடையை அடைத்து அராஜகம் செய்யும் தி.மு.க எம்.எல்.ஏ.!
தி.மு.க'வின் அட்டகாசங்களால் நாளுக்கு நாள் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எதிர்கட்சியாக இருக்கும் போதே தி.மு.க'வின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. அந்த வகையில் தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் பாசனத்திற்காக பொதுமக்களுக்கு தண்ணீர் தராமல் மணல் மூட்டைகளை வைத்து அடைத்த சம்பவம் மதுரை மக்களை மனம் நோகடித்துள்ளது.
மதுரை வடக்கு தாலுகாவில் அமைந்துள்ளது சிறுதூர் கிராமம். இங்கு சிறுதூர் பெரிய கண்மாய் மற்றும் சின்னக் கண்மாய் அமைந்துள்ளது. கடந்த 25 வருடமாக சிறுதூர் பெரிய கண்மாயில் தண்ணீர் நிறைந்ததும், சின்னக் கண்மாய்க்கு மடையின் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு அதிக மழை பொழிவு இருந்ததால், பெரிய கண்மாய் விரைவாக நிறைந்துவிட்டது. இதனால் பெரிய கண்மாயின் மடையைத் திறந்து சின்ன கண்மாய்க்கு நீர் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், தற்போது கண்மாய் முழுமையாக நிரம்பி உடையும் தருவாயில் இருக்கும் போதும் அரசியல் ஆதாயத்துக்காக தி.மு.க'வின் மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ மூர்த்தி தலைமையில் ஒரு சொட்டு தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு மணல் மூடையை வைத்து அடைத்துவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இப்படி தனது சொந்த லாபத்திற்காக ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து பிழைக்கும் தி.மு.க'வின் செயல்பாடுகளை மக்கள் வெறுத்து வருகின்றனர். எதிர்கட்சியில் இருக்கும் போதே இப்படி அராஜகம் எனில் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ என மக்கள் பயத்தில் உள்ளனர்.