கோவில் வழிகாட்டி பலகை மீது "உதயநிதி" போஸ்டர்: பொதுமக்கள் காட்டிய அதிரடியில் கிழித்த தி.மு.க நிர்வாகிகள்!

Update: 2022-11-28 08:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வாழ்வச்சகோஷ்டம் பகுதியில் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் உள்ளது.

பக்தர்களின் வஸ்திகக்காக கோயிலுக்கு செல்லும் வழி தெரிய வேண்டும் என புலிப்பனத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டி பலகையையும் விட்டு வைக்காத திமுகவினர் இரவோடு இரவாக வாழ்த்து போஸ்டரை ஒட்டி சென்றுள்ளனர். காலையில் அந்த வழியாக கோயிலுக்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஊர் பொதுமக்களும் இந்து அமைப்பினரும் அங்கு திரண்டனர். இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போஸ்டரை ஒட்டியவர்களே கிழித்து அகற்ற வேண்டும் அப்போது தான் அந்த பகுதியை விட்டு செல்வோம் என பொதுமக்கள் கூறினர்.

அதே ஊரை சேர்ந்த தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளை போலீசார் அழைத்தனர். அவர்களை வைத்து வழிகாட்டி பலகை மீது ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்து அகற்றினர். திமுக போஸ்டரை திமுக நிர்வாகிகளே கிழித்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Input From: DailyThanthi

Similar News