தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது - கொதிக்கும் வேலூர் இப்ராஹிம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பா.ஜ.க சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் அவர்கள் தெரிவித்தார்.

Update: 2022-08-25 10:45 GMT

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடக்கும் அட்டூழியங்களுக்கு தி.மு.க அரசு துணை போகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று பா.ஜ.க தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று கீழ்க்கண்டவாறு தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். தி.மு.கவினர் திருமாவளவன் உள்ளிட்டோர் ஹிந்து மத நம்பிக்கைகளை இழிவு படுத்துகிறார்கள்.


குறிப்பாக திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் லியோனி அவர்கள் இந்து மத சடங்குகள் குறித்து இழிவாக பேசினார். ஓட்டு வங்கிக்காக இந்துக்கள், முஸ்லிம்களை இரண்டு அணிகளாக பிரிந்து இவர்கள் பிரிவினையை உண்டு படுத்துகிறார்கள். பயங்கரவாத சக்திகள் காஷ்மீருக்கு பின் தமிழகத்தில்தான் வேரூன்றி இருக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்துத்வா பேசக்கூடிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தற்போது ஏற்பட்டு உள்ளது.

கோவையில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக காரமடை சேர்ந்த முஸ்லிம் முன்னெடுத்தார். அவர் தற்போது கொலை செய்யப்பட்டார் சட்டம் ஏன்? அவரை காப்பதற்கு முன்வரவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று அவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். தி.மு.க ஆட்சியில் இத்தகைய சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக நாங்கள் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்புக் குரலை தெரிவித்து வருவோம் என்றும் அவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

Input & Image courtesy:Dinamalar

Tags:    

Similar News