தி.மு.க ஆட்சி அதிகரித்த மலக்குழி மரணங்கள்: எட்டு மாதங்களில் 15 மரணங்கள்.!

தி.மு.க ஆட்சியில் வெறும் எட்டு மாதங்களில் 15 மலக்குழி மரணங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

Update: 2023-01-11 10:59 GMT

சென்னையை சேர்ந்த ஆஷா நிவாஸ் என்ற மையத்தில் சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த மையம் தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் ஆய்வு குறித்து தனது ஆராய்ச்சியை மேற்கொண்டது. இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் என்ற தனியார் அமைப்பு சார்பில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் சாக்கடைகளில் குப்பைகளை அள்ளுவது, மலம் அள்ளுவது, சாக்கடையை கழுவது, கழிவுநீர் கால்வாயில் அடைப்பு நீக்குவது, கழிவு நீர் தொட்டி கழிவுகளை அகற்றுவது, உள்ளே இறுங்கி கழிவுகளை அள்ளும் பொழுது பணிகளின் செய்யும் பொழுது மரணம் அடைந்து தொடர்ச்சியாக வருகிறது.. இந்த தூய்மை பணிக்காக தலித்துகள், அருந்ததியர் சமூகத்தினர் செய்கிறார்கள் இவர்களில் 95 சதவீதம் பேர் பெண்கள்.


இதில் ஐந்து ஆண்டுகளில் சுமார் 55 பேர் இறந்துள்ளார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் தி.மு.க அரசு பதவி ஏற்ற பிறகு இதனுடைய எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. 2016 முதல் 2020 வரையான ஐந்து ஆண்டு காலத்தில் மலக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட 55 பேர்‌ உயிரிழந்திருக்கின்றனர். 2022ஆம் ஆண்டில் எட்டே மாதங்களில் 15 பேர் இறந்துள்ளனர்.


சென்னையில் அதிகபட்சமாக 12 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உடைகளோ, தொழில்நுட்ப வசதிகளோ தரப்படுவதில்லை என்ற குற்றம் சாட்டும் தற்போது எழுந்து வருகிறது. இது பல மரணங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களிலாவது இதுபோன்ற சுத்திகரிப்புப் பணிக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி அரசு மரணங்களைத் தடுக்குமா?

Input & Image courtesy: Asianet News

Tags:    

Similar News