தமிழகத்தில் போதைப்பொருள் ஆறு தான் ஓடுகிறதா? தி.மு.க ஆட்சியின் அவலநிலை!

தமிழகத்தில் போதைப்பொருள் ஆறு தான் ஓடுகிறது.

Update: 2023-01-11 02:17 GMT

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவோம் குறிப்பாக தமிழகத்தில் பாலாறு, தேனாறு ஓடும் என்று பொய் வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து ஆட்சிக்கு வந்தது திமுக. ஆனால் தற்பொழுது ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் போதைப்பொருள் ஆறு தான் ஓடுகிறது. போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் முதல்வர் திணறுகிறார். தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆவின் பால் கிடைக்கிறதோ? இல்லையோ? ஆனால் தற்பொழுது தமிழகத்தில் தடை இல்லாமல் கஞ்சா போது பொருள் கிடைக்கிறது என்று கூறலாம்.


தமிழகத்தில் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் சப்ளை அதிகரித்து தான் பெறுகிறது. இதை எங்காவது ஒன்று, இரண்டு இடங்களில் தான் போலீசார் பிடிக்கிறார்கள். விளம்பரத்திற்காக போட்டோ எடுப்பதில் மும்மரமாக இருக்கும் முதல்வர் அவர்கள் தமிழகத்தில் நடக்கும் போது பொருள் சப்ளையர்களின் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்? பள்ளி மாணவர்கள் முதல் மாணவிகள் வரை தற்போது போதை பொருள் மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. கஞ்சா வேட்டை, கஞ்சா வேட்டை 2.0 போன்ற பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டாலும், அவர்களுடைய கைகள் கட்டப்பட்டு இருக்கின்றது.


காவல் தன்னுடைய கையில் வைத்திருக்கும் முதல்வர் அவர்கள் அதை தன் முடிவு குடும்பத்திற்கு தாரை பார்த்து விட்டாரா? என்பது போன்று கேள்விகளும் மக்கள் மனதில் எழுகிறது. திமுகவின் திறன் அற்ற ஆட்சியில் தான் தமிழகத்தில் பல்வேறு சமுதாய சீர்கேடுகள் அரங்கேறி வருகின்றன. ஒருவேளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த போதைப்பொருள் வியாபாரத்தில் தி.மு.கவினரே ஈடுபட்டு வருவதால் தான் அரசாங்கம் சும்மா இருக்கிறதா என்பது போன்று தொடர் கேள்விகளும் எழுதுகிறது.

Input & Image courtesy: J News

Tags:    

Similar News