தமிழகத்தில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடுவிழா - ராமதாஸின் கேள்வி?

தி.மு.க ஆட்சியின் முரண்பாடுகளில் உச்சத்தில் கல்விக் கொள்கை இருப்பதாக ராமதாஸ் அவர்கள் அறிக்கை.

Update: 2022-09-04 03:00 GMT

தமிழ்நாட்டில் தற்போது மாணவர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை தமிழக அரசு ஏற்கனவே நான் முதல்வன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மாணவர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டுவது தான் தற்போது உள்ள தி.மு.கவின் முக்கிய நோக்கம் என்றும் அடிக்கடி கூறி வருகிறது. புதிய ஆசிரியர்கள் உடனடியாக நியமிப்பது பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் இருபதாம் தேதி வெளியிட்டன. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டன.


குறிப்பாக தொழில் கல்வி பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. மாணவர் சேர்க்கைக்குப் பிறகு தற்போது ஆசிரியர் பற்றாக்குறை, அதன் காரணமாக தொழில் கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகின்றது என்று அரசு அறிவித்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மாணவர் சேர்க்கைக்கு முன்பே ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது தெரிந்து ஏன் மாணவர்களை சேர்க்கைக்கு பிறகு இப்படி ஒரு முடிவை அரசு சார்பில் அறிவிக்க வேண்டும்? என்று கேள்வியை கேட்டுள்ளார். மேலும் மாணவர்களை சேர்க்கை செய்த பிறகு தற்போது ஆசிரியர் பற்றாக்குறை என்று கூறுவது தமிழக அரசின் முன்னுக்குப் பின்னான முரண்பாடுகளை காட்டுகிறது.


மாணவர்களின் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை அரசு எடுப்பதாக பெரும் விளம்பரம் மட்டும் செய்து கொண்டால் போதாது. தொழிற்கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு கை கொடுக்கும். அதை தமிழகத்தில் மூடுவது என்பது பல்வேறு மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கும். எந்த நோக்கத்திற்காக அரசு செயல்படுகின்றதோ, அதை நிறைவேற்றும் வகையில் தான் தொழில் கல்வி பாடப்பிரிவுகளை நிறுத்துவது என்பது முரண்பாடுகளின் உச்சம் என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Input & Image courtesy:Maalaimalar News

Tags:    

Similar News