கோவை: மருத்துவரிடம் இருந்து தடுப்பூசியை பிடுங்கி கட்சிக்காரருக்கு விநியோகித்த தி.மு.க. செயலாளர்.!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதே போன்று தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டம், போத்தனூர், குனியமுத்தூர், குறிச்சி, சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியானது நேற்று நடைபெற்றது.

Update: 2021-06-06 02:33 GMT

அதே போன்று குறிச்சி அரசு துவக்கப்பள்ளி முகாமில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தடுப்பூசி வருவதற்கு சில நிமிடம் தாமதம் ஏற்பட்டதால், முகாம் டாக்டர் மோகன் டோக்கன் வழங்கவில்லை. சிறிது நேரத்தில் மருந்து வந்தவுடன், மாநகராட்சி பணியாளரிடம், டோக்கன் வழங்க டாக்டர் அறிவுறுத்தினார். அப்போது 95வது வார்டு பகுதி திமுக பொறுப்பாளர் பார்த்திபன், டோக்கன்களை பிடுங்கி, வரிசையில் காத்திருந்த சிலருக்கு, முன்னுரிமை கொடுத்து வழங்கினார்.

டாக்டர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டாக்டரை பார்த்திபன் ஒருமையில் பேசினார். அங்கு வந்த போலீஸ் எஸ்.ஐ. முருகேஷ் இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்தார். போலீசார் முன்னிலையில், மீண்டும் மாநகராட்சி பணியாளர் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது.

தடுப்பூசிக்காக காத்திருந்தோர் கூறுகையில், மருந்தின அளவை பொறுத்து, டோக்கன் வழங்குவதாக டாக்டர் கூறியதால், நாங்கள் காத்திருந்தோம். திமுக காரர் ஒருவர் டாக்டரை திட்டி தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தினார். ஊசி போடும் இடத்தில் கட்சிகாரருக்கு என்ன வேலை? இது போன்றவர்களால்தான் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்றார்.

Similar News