எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியாக இரட்டை வேடம் போடும் தி.மு.க - அண்ணாமலையின் நெத்தியடி பதில்!

தி.மு.க எதிர்க்கட்சி ஆக மற்றும் ஆளும் கட்சியாக மாறிப் பிறகு போடும் இரட்டை வேடங்கள்.

Update: 2023-01-13 11:02 GMT

தி.மு.க ஆட்சியில் இல்லாத பொழுது எதிர்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு விதமாக பேசுகிறது. தற்போது ஆளும் கட்சியாக மாறிவிட்டது மற்றொரு விதமாக நடந்து கொள்கிறது. குறிப்பாக தி.மு.க எதிர்கட்சியாக இருக்கும் பொழுது அரசாங்கம் கட்டாயம் மக்களின் நலனுக்காக இது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு போராட்டங்களில் மேற்கொள்ளும். ஆனால் அரசாங்கத்தை பிடித்து பிறகு மக்களுக்காக நாங்கள் செய்யும் நன்மை என்று முன்பு கூறியதை மறந்து விட்டு தங்களுடைய குடும்ப நன்மைகளுக்காகவே எப்பொழுதும் உழைத்து வருகிறது.


அந்த வகையில் ஸ்டாலின் அவர்களுடைய வீடியோக்கள் மற்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது அவர் அரசாங்கத்தை பற்றி கூறிய கருத்துக்கள் எல்லாம் தற்போது வீடியோக்களாக வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. கண்டிப்பாக மக்கள் மனதில் ஒரு கேள்வியும் எழுந்து இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது ஏன் ஆட்சியை கைப்பற்றிய பிறகு மக்களுக்கு அதை செய்ய மாட்டிக்கிறார்?


எனவே தி.மு.க அரசின் உண்மையான செயல்பாடு பற்றி பா.ஜ க தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பொழுது மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறிய கருத்தை, தற்போது முன்வைத்து பழைய விஷயத்தை எப்பொழுதும் மறக்க முடியாது. நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் வரலாற்றில் பதிந்ததாகவே இருக்கும். பழையதை நினைத்து பார்க்க வேண்டும்.

Input & Image courtesy: Media and News

Tags:    

Similar News