பள்ளிகளிலும் தங்கள் சித்தாந்தத்தை திணிக்கிறதா தி.மு.க. அரசு ? இறைவணக்கத்துக்கு தடை விதிப்பு!

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வரும் நிலையில், இறைவணக்க கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு திடீரென்று தடை விதித்துள்ளது.;

Update: 2021-12-05 09:38 GMT

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வரும் நிலையில், இறைவணக்க கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு திடீரென்று தடை விதித்துள்ளது. இந்த செயலுக்கு அனைத்து தரப்பு மக்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாற்றாக ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்றது.

இருந்தபோதிலும் குறிப்பிட்ட மாணவர்கள் கையில் செல்போன் இல்லாமல் பாடத்தை கவனிப்பதற்கு மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகினர். வசதி படைத்த குழந்தைகளிடம் மட்டும் செல்போன் இருந்தது. வசதி இல்லாத குழந்தைகள் பாடத்தை கவனிப்பதற்கு மிகப்பெரிய சிரமங்களை சந்தித்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. இதன் காரணமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தொற்று பரவாமல் இருப்பதற்காக மாணவ, மாணவிகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளிக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் முககவசம் அணிந்த பின்னரே பள்ளியில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒன்றரை ஆண்டுகளாக வீடுகளில் முடங்கிய பள்ளி, மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருவதை பார்க்க முடிகிறது.

இதனிடையே கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் காரணத்தினால் இணைவணக்கம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு திமுக அரசு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவுகளை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பொதுமக்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதாவது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு கூட்டம், கூட்டமாக குடித்துவிட்டு போகும் இடங்களில் கொரோனா பரவாது. பள்ளி மாணவர்கள் மட்டும் இறைவணக்கம் கூட்டத்தில் பங்கேற்றால் கொரோனா வந்துவிடுதா என்ற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். எனவே முககவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து திறந்த வெளியில் இறைவணக்க கூட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பொதுமக்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மழை பெய்யும் காலங்களில் இறைவணக்க கூட்டம் பொதுவெளியில் நடக்காது. மாணவ, மாணவியரின் வகுப்பறையில் இருப்பர். அப்போது ஒலிப்பெருக்கி மூலம் இறைவணக்க பாடல் ஒலிக்க செய்து சில மாணவ, மாணவியர் பாடுவார்கள். அப்போது வகுப்பறையில் இருந்தவாறு மற்றவர்களும் பாடுவர். இதே வழிமுறைகளை இப்போதும் கடைப்பிடிக்கலாம் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இது தொடர்பாக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கூறும்போது, கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் இறைவணக்கம் கூட்டத்தை நடத்தாமல் பாடங்கள் மட்டும் வகுப்புகளில் நடைபெறுகிறது. புதிய வைரஸான ஒமைக்ரான் தொற்றை காரணம் காட்டி இறைவணக்க கூட்டம் புறக்கணிக்கப்படுகிறது. எனவே மாணவர்கள் இறைவணக்கத்தில் பங்கேற்றால் அவர்களின் ஒற்றுமை மற்றும் சுயஒழுக்கத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்க்கும். சமூக இடைவெளியுடன் அமர சொல்லும் அரசு தற்போது அதே போன்று கடைப்பிடிக்க வைத்து இறைவழிப்பாட்டை நடத்த சொல்லலாம் என்றார். மேலும், மாணவர்களின் வழிபாட்டு உரிமைக்கான அச்சுறுத்தாகவே பாஜக நினைக்கிறது. காலை நேரத்தில் இறைவனை வணங்கி பாடம் படிக்க செல்வது மத நம்பிக்கை மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் மிகப்பெரிய நன்மையை சேர்க்கும. திமுகவுக்குதான் கடவுள் நம்பிக்க இல்லை. தற்போது அவர்கள் மற்றவர்கள் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இறைவழிப்பாட்டை உடனடியாக பள்ளியில் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: News Track


Tags:    

Similar News