'கூகுள் பே' மூலம் டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்யும் தி.மு.க'வினர்! அடுத்த கட்டத்திற்கு செல்லும் திராவிட மாடல்!

Update: 2022-02-18 12:11 GMT

முதல்வர் மு.க ஸ்டாலின் சட்ட மன்ற தொகுதியான கொளத்தூர் தொகுதியில், தி.மு.க'வினர் 'கூகுள் பே' மூலம் டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. பல இடங்களில் தி.மு.க;வினருக்கு எதிராக மக்களின் மனநிலை இருப்பதால், தி.மு.க'வினர் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் பல இடங்களில் ஆளும் கட்சி  தேர்தல் விதிமீறல்களில்  ஈடுபட்டு வருவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் வரிசையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்ட மன்ற தொகுதியான கொளத்தூர் தொகுதியில்,  பாலாஜி மற்றும் ராஜாஜி நகரில் தி.மு.க'வினர் வாக்காளர்களை ஒன்றுகூட்டி, 'கூகுள் பே'  மூலம் டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து அப்பகுதி வாக்காளர்கள் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க, காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர்.

"முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே தி.மு.க'வினர் இத்தகைய தேர்தல் விதிமுறைகளில் ஈடுபடுவது" வருத்தத்தை அளிக்கிறது "என்று சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். 


Full View


Tags:    

Similar News