மாணவர்கள் மாவோயிஸ்ட்கள் ஆனாலும் பரவாயில்லை.. அருந்ததிராய் புத்தகத்தை திரும்ப ஏற்க சொல்லும் தி.மு.க..
மாணவர்கள் மாவோயிஸ்ட்கள் ஆனாலும் பரவாயில்லை.. அருந்ததிராய் புத்தகத்தை திரும்ப ஏற்க சொல்லும் தி.மு.க..
தீவிரவாதம், மாவோயிசம் போன்றவை பலதரப்பட்ட மக்கள் வாழும் இந்தியா போன்ற தேசத்தில் மிகவும் அச்சுறுதல் வாய்ந்ததாகும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வரலாறு மிகவும் அதிகம். மாவோயிசம், தீவிரவாதத்திற்கு தனது குடும்பத்தினரை பலி கொடுத்தவர்களும் ஏதுமறியா அப்பாவிகளும் இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் அதிகம்.
மாவோயிசம் நாட்டின் அதிகாரத்தை எதிர்த்து தங்கள் இன மக்களை கிளச்சியுற செய்து அதன் மூலம் ஆளும் அரசுக்கும், அமைதியாய் வாழும் மக்களுக்கும் அச்சுறுத்தலை விடுத்து தாங்களும் நிம்மதியாக இல்லாமல் மற்றவர்களையும் நிம்மதியாக இருக்கவிடாமல் செய்வதே ஆகும்.
இப்படிப்பட்ட சூழலில் அடுத்த தலைமுறையாவது தீவிரவாத மற்றும் மாவோயிச நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கருத்தில் கொண்டுதான் அருந்ததிராயின் "Walking with the comrades" என்ற நூல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
வழக்கம் போல் சூரிய உதயமானாலும் சரி, மழை பெய்தாலும் சரி பெய்யாவிட்டாலும் சரி என எல்லா நிகழ்வையும் அரசியலாக்கி மக்களை குழப்பி அதில் குளிர்காயும் தி.மு.க இந்த விஷயத்தையும் கையில் எடுத்துள்ளது. அதாவது மக்கள் தீவிரவாதிகள் ஆனாலும் பரவாயில்லை மக்களின் வாரிசுகள் மாவோயிசத்தை கையில் எடுத்து குட்டிச்சுவர் ஆனாலும் பரவாயில்லை நமக்கு அரசியல் செய்து பிழைப்பு ஓட வேண்டும் என்ற நோக்கத்தில் அருந்ததிராயின் மாவோயிச ஆதரவு கருத்துக்களை மாணவர்களின் பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும் என தி.மு.க குறியாக உள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆங்கில முதுகலை வகுப்புப் பாடத்திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக இடம்பெற்றிருந்த எழுத்தாளர் அருந்ததிராயின் "Walking with the comrades" என்ற நூல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவு செய்து அறிவித்துள்ளார்.
மேலும் அதில் உள்ள கருத்துக்கள் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் வகையிலும் அவர்களை மேன்மைப்படுத்தும் வகையிலும் இருப்பதால் அது பாடதிட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.