தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தயக்கம் வேண்டாம்.. அமைச்சர் விஜயபாஸ்கர்.!

தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தயக்கம் வேண்டாம்.. அமைச்சர் விஜயபாஸ்கர்.!

Update: 2021-02-20 17:22 GMT

திருச்சி காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சுகாரதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி 2வது டோஸை இன்று போட்டுக் கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டிலேயே சில மாநிலங்களில் இந்த வைரஸ் தாக்குதல் சற்று அதிகமாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று 500க்கும் குறைவாகவே உள்ளது.

இருந்தாலும், பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். அனைவரும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் அனைவருமே கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். விரைவில் அனுமதிக்காக காத்திருக்கிறோம். கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு போடப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
 

Similar News