நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அனுப்பாதீர்கள்.. பெற்றோர்களுக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி., அறிவுரை.!

நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அனுப்பாதீர்கள்.. பெற்றோர்களுக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி., அறிவுரை.!

Update: 2020-12-10 09:16 GMT

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கிராம பகுதிகளில் குழந்தைகள் நீர்நிலைகளில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதற்காக அரசு அதிகாரிகள் மூலமாக எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. கடந்த 4ம் தேதி  கள்ளக்குறிச்சி கருணாபுரம் தடுப்பணையில் வரும் வெள்ளப்பெருக்கைக் காணச் சென்ற கருணாபுரத்தைச் சேர்ந்த குமார் மகன் ராஜ்குமார் 16, தேவேந்திரன் மகன் வரதராஜன் 15, மற்றும் ராமு மகன் அஸ்வந்த் 15, ஆகிய 3 சிறுவர்கள் தடுப்பணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

உடனடியாக  வெள்ளத்தில் அடித்துச் சென்றவர்களை மீட்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துரையினருடன் இணைந்து ஆற்றில் அடித்துச் சென்றவர்களில் இருவரை மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

மற்றொருவர் நலமுடன் உள்ளார். இந்நிலையில், அஸ்வந்த் என்ற சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிறுவன் மீடட்கபடவில்லை. இதனிடையே இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்க உத்தரவிட்டதுடன் காவல்துறையில் உள்ள பேரிடர் மீட்பு படையினரை வரசெய்து, மீட்பு பணியை துரிதபடுத்தினார்.

பின்னர் காணாமல் போன அஸ்வந்த் என்ற ராமு, குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். விரைவில் காணாமல் போன சிறுவன் மீட்கப்படுவார் என்று உறுதியளித்தார். மேலும், நீர்நிலைப் பகுதிகளில் பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் எனவும் எஸ்.பி.,  பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Similar News