தமிழகத்தில் முன்கள பணியாளர்களுக்கு எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது தெரியுமா.!

தமிழகத்தில் முன்கள பணியாளர்களுக்கு எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது தெரியுமா.!

Update: 2021-01-24 09:31 GMT

நாடு முழுவதும் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவின்பேரில் தமிழகத்தில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 168 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்றது. இதில் 16 ஆயிரத்து 800 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தடுப்பு மருந்து தயாராக இருந்தது.

இந்நிலையில், 3,381 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 194 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 7,575 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Similar News