முடுங்கும் அரசு மருத்துவமனை... மருத்துவர்கள் போராட்டம்... பயத்தில் அலறும் தி.மு.க?
தி.மு.க ஆட்சியில் தற்பொழுது டாக்டர்களும் உண்ணாவிரத போராட்டம்.
ஊதிய உயர்வுக்கான அரசாணை உடனடியாக அமல்படுத்த கோரி அரசர் டாக்டர் சங்கங்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தினை அரசு டாக்டர் சங்கத்தினர் சென்னையில் மேற்கொண்டு இருக்கிறார்கள். இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர் சங்க தலைவர் செந்தில் மற்றும் செயலாளர் ரவிசங்கர் ஆகியோர் வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பு படி, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஒரே மாதத்தில் அரசு டாக்டர்களுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு பயன் தரும் வகையில் அரசாணை மற்றும் 293 அறிவித்து இருந்தார்.
இந்த அரசானையை ஒரு சிலர் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசாணை 293-ஐ அமல்படுத்த கோரி சென்னை ராஜரத்தினம் மைதான பலாகத்தில் இன்று உணவருத போராட்டத்தை அரசு மருத்துவர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதில் அரசு டாக்டர்கள் 500 பேர் பங்கேற்க இருக்கிறார்கள். அரசு மறுத்த மீண்டும் 29ஆம் தேதி புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு மற்றும் ஏப்ரல் ஐந்தாம் தேதி ஒட்டுமொத்த விடுப்பு எடுக்கும் போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் தற்பொழுது கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
இவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. தி.மு.க ஆட்சியில் பல்வேறு தரப்பினர்கள் போராட்டம் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக அரசு ஊழியர்கள் முதல் தற்போது மருத்துவர்கள் வரை அனைவரும் தற்போது நடக்கும் தி.மு.க ஆட்சியில் வஞ்சித்தினை மட்டுமே எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த ஒரு அறிவிப்பால் திமுக மத்தியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar