பிகில் படத்தை காண்பித்து சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்: சென்னையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்.!

விபத்தில் சிக்கி ரத்த காயங்களுடன் போராடிய சிறுவன், ஊசி போட்டுக்கொள்வதற்கு அஞ்சி உள்ளார். அவரை சமாதானப்படுத்துவதற்காக அவருக்கு பிடித்தமான நடிகர் விஜயின் பிகில் திரைப்படத்தை காண்பித்து சிகிச்சை அளித்திருக்கும் சம்பவம் தற்போது வெளியில் தெரியவந்துள்ளது.

Update: 2021-07-08 07:04 GMT

சென்னையில் ஒரு சிறுவன் விபத்தில் காயமடைந்து வலியால் துடித்துக் கொண்டிருந்தபோது, விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை காண்பித்து டார்டர்கள் சிகிச்சை அளித்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது. நடிகர் விஜய்க்கு சிறுவர் முதல் முதியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளார். இளைஞர்களைவிட சிறுவர்களும் அதிகளவு விஜய்யை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், விபத்தில் சிக்கி ரத்த காயங்களுடன் போராடிய சிறுவன், ஊசி போட்டுக்கொள்வதற்கு அஞ்சி உள்ளார். அவரை சமாதானப்படுத்துவதற்காக அவருக்கு பிடித்தமான நடிகர் விஜயின் பிகில் திரைப்படத்தை காண்பித்து சிகிச்சை அளித்திருக்கும் சம்பவம் தற்போது வெளியில் தெரியவந்துள்ளது.


அந்த சிறுவன் சென்னை மயிலாப்பூர், கணேசபுரத்தை சேர்ந்த சசிவர்ஷன் 10, தனது மாமா அரவிந்த் என்பவருடன் கடந்த செவ்வாய்கிழமை மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அண்ணாசாலை அருகே சென்றபோது பின்னாடி அமர்ந்திருந்த சிறுவன் சசிவர்ஷன் தூக்கத்தில் கீழே விழுந்ததில் நெற்றி மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து உடனடியாக ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது நெற்றியில் பலத்த காயம் இருந்ததால் அவருக்கு தையல் போடுவதற்கு டாக்டர்கள் முடிவு செய்து ஊசி போட முயன்றுள்ளனர். ஆனால் சிறுவன் பயத்தில் ஒத்துழைக்காமல் மறுத்துள்ளார். டாக்டர்கள் எவ்வளவு முயன்றும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இருந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த தன்னார்வலர் ஒருவர் சிறுவனை சமாதானப்படுத்துவதற்காக என்ன பிடிக்கும் என கேட்டுள்ளார்.


அப்போது தனக்கு விஜய்யை அதிகமாக பிடிக்கும் என சிறுவன் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை காண்பித்துள்ளளர். அப்போது மெய் மறந்து சிறுவன் திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அதற்குள் டாக்டர்கள் சிறுவனுக்கு தையல் போட்டு காயத்திற்கு சிகிச்சை அளித்து முடித்துள்ளனர். இந்த செய்தி தற்போது வெளியில் தெரியவந்துள்ளது.

Similar News