அரசு அலுவலர்களின் போராட்டத்தில் குளிர்காய பார்க்கிறாரா ஸ்டாலின்?
அரசு அலுவலர்களின் போராட்டத்தில் குளிர்காய பார்க்கிறாரா ஸ்டாலின்?
அரசு ஊழியர்கள் பிப்ரவரி 2'ம் தேதி முதல் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு அளிப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதில், "தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மையத்தின் சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று சில கருத்துகளைச் சொல்வதற்கு வாய்ப்பளித்த அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கமான மாநாடாக இல்லாமல், போராட்டத்துக்கான ஆயத்த மாநாடாக இதனைக் கூட்டி இருக்கிறீர்கள்.
இழந்ததை மீட்டிட இருப்பதைக் காத்திட' என்ற உங்களது அறிவிப்பிலேயே அனைத்தும் அடங்கிவிட்டது இன்றைய அ.தி மு.க. அரசு, அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துவிட்டது, இனிமேல் பறிப்பதற்கு எதுவும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம், ஊரகவளர்ச்சி அலுவலர் சங்கம், வணிகவரிப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் அனைவரும் சேர்ந்து உரிமை மீட்பு வெறும் பேரல்ல, புனிதப் போர் என்று அறிவித்துள்ளீர்கள்,
உங்களது கோரிக்கைகளை நான் பார்த்தேன் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட குற்றக் குறிப்பாணையை நீக்க வேண்டும். மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியம் போன்றவர்கள், பணி ஓய்வின் போது தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்
முடக்கப்பட்ட அகவிலைப்படியைத் தர வேண்டும். பறிக்கப்பட்ட சரண்டர் உரிமையை வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், உயர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள் உள்ளிட்ட, சிறப்பு காலமுறை ஊதியம் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.