நூலகங்களில் தினகரன், முரசொலி, குங்குமம், தமிழ்முரசு வாங்க மிரட்டுவதா? தி.மு.க. அரசுக்கு எதிராக கொந்தளித்த ராமதாஸ்.!

தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் திமுக ஆதரவு நாளிதழ்களை மட்டும் வாங்கச் சொல்லும் தமிழக அரசின் முடிவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-08 10:20 GMT

தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் திமுக ஆதரவு நாளிதழ்களை மட்டும் வாங்கச் சொல்லும் தமிழக அரசின் முடிவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த ஒரு மாதங்களில் பல்வேறு சர்சைகளில் சிக்கி வருகிறது. கொரோனா தொற்று பரவலில் சரியாக திட்டமிடாமல் இருந்ததால் 30 ஆயிரத்தை கடந்து எண்ணிக்கை பதிவானது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். இதனிடையே அரசு நூலகங்களில் திமுக ஆதரவு நாளிதழான தினகரன், முரசொலி உள்ளிட்டவை வாங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பலர் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.




 


இந்நிலையில், அரசு நூலகங்களில் திமுக ஆதரவு நாளிதழ்களை மட்டும் வாங்கச் சொல்லும் தமிழக அரசு உத்தரவிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கு முரசொலி, தினகரன், குங்குமம், தமிழ் முரசு என திமுக ஆதரவு ஏடுகளை மட்டும் வாங்கவும், அதற்கான ஓராண்டு சந்தாவை முன்கூட்டியே செலுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. இது நியாயமற்றது!


 



நாளிதழ்களுக்கான சந்தா, விளம்பரம் ஆகியவற்றில் தமிழக அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து ஊராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கும் அனைத்து ஆங்கில, தமிழ் நாளிதழ்களையும் வாங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News