பிரேசிலிருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வந்த ரூ.1,000 கோடி மதிப்புள்ள 'கொக்கைன்' பறிமுதல்.!

பிரேசில் நாட்டிலிருந்து மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு சரக்கு கப்பல் வந்துள்ளது.

Update: 2021-04-21 02:52 GMT

பிரேசில் நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்தி வரப்பட்ட 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டிலிருந்து மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு சரக்கு கப்பல் வந்துள்ளது. அந்த கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.


 



இந்த தகவலை தொடர்ந்து மத்திய புலானய்வு துறை அதிகாரிகள் கப்பலை சோதனை செய்தனர். அப்போது மரத்தடிக்கு இடையே ஒரு கருப்பு நிற பையில் 300 கிலோ கொக்கைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்றி மத்திய வருவாய் புலனாய்வு, சுங்க இலாகா துறையினர் மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 300 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தூத்துக்குடி துறைமுக ஊழியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Similar News