திருப்பதி ஏழுமலையான் கோவில்: துர்கா ஸ்டாலின் திடீர் தரிசனம் ஏன்?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் அவர்கள் திடீர் தரிசனம்.

Update: 2022-04-15 13:54 GMT

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு வந்தார். அவரை, துணை அதிகாரி கஸ்தூரிபாய், உதவி அதிகாரி பிரபாகர்ரெட்டி, கண்காணிப்பாளர் மது, உதவி பறக்கும் படை அதிகாரி வெங்கடரமணா, ஆகம ஆலோசகர் சீனிவாசாச்சாரியார் ஆகியோர் வரவேற்று கோவிலுக்கு அழைத்துச் சென்று, தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். மேலும் அவருக்கு விஐபி தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


கோவிலில் நடந்த குங்கும அர்ச்சனை சேவையில் துர்கா ஸ்டாலின் பங்கேற்று மூலவர் மற்றும் உற்சவா் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் அதிகாரிகள் லட்டு, தீர்த்தப் பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர். மேலும் இதை தொடர்ந்து கோவிலில் திடீர் தரிசனம் செய்வதற்கு காரணம் என்ன என்று பல்வேறு கேள்விகளும் தற்போதுள்ள எழுந்துள்ளது. 


அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று வழிபட்டார். அவருக்கு, கோவில் அதிகாரிகள் லட்டு, தீர்த்தப்பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர். பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.மேலும் பல்வேறு கோவில்களுக்கு சென்று அவர் வழிபட காரணம் என்ன? என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. வசந்து உற்சவத்தில் தங்கத் தேரோட்டம் இருப்பதால் அதனையும் தரிசனம் செய்ய உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Input & Image courtesy:  Thanthi News

Tags:    

Similar News