தி.மு.க வாக்குறுதியை நம்பி ஏமாந்து நிற்கிறோம்! - போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள்
தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவது குறித்த ஆர்ப்பாட்டம்.
பெண்கள் கட்டுவது தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். சட்டமன்ற தேர்தலின் போது ஏற்கனவே தி.மு.க அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாக்குறுதி ஆனது தற்போது வரை நிறைவேற்றாத ஒரு சூழ்நிலையில் இருந்து உள்ளது.
மேலும் அறிக்கையில் ஏற்கனவே சொல்லப்பட்டது போல் தி.மு.க அரசு தற்போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பல்வேறு அரசு ஊழியர்கள் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் தி.மு.க அரசு ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஆகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்னும் தன்னுடைய வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு வைத்துள்ளது என்பதை அரசு ஊழியர்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளார்கள்.
உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமாறு அவர்கள் கோரிக்கையை முன் வைத்து உள்ளார்கள். தமிழ்நாடு அரசு சங்கத்தினரை சேர்ந்தவர்கள் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். மேலும் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் அனைவரும் கோஷமிட்டு கொண்டார்கள். இந்த கூட்டத்தில் சுமார் 30 பெண் ஊழியர்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:Dinamalar News