சட்டமன்ற தேர்தல் எதிரொலி: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை.!

சட்டமன்ற தேர்தல் எதிரொலி: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை.!

Update: 2021-02-17 17:13 GMT

தமிழக சட்டபேரவையின் பதவிக்காலம் மே இறுதியில் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது.

கடந்த 10ம் தேதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னையில் 2 நாட்கள் முகாமிட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எந்த தேதியில் தேர்தல் நடத்துவது, மற்றும் கொரோனா தொற்று இருக்கிறதால் பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நாளை மாலை 4 மணிக்கு காணொலி வாயிலாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் வாக்கு இயந்திரம் மற்றும் தேர்தல் நேரம் உள்ளிட்டவையும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News