கொட்டித்தீர்த்த கன மழை: சென்னையில் 4 சுரங்கபாதைகள் மூடல்!

சென்னையில் நேற்று (டிசம்பர் 30) நண்பகலில் இருந்து மிதமான சாரல் மழை பெய்தது. இதனையடுத்து நாள் முழுவதும் கனமழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் நகரில் பல சாலைகள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.;

Update: 2021-12-31 03:26 GMT

சென்னையில் நேற்று (டிசம்பர் 30) நண்பகலில் இருந்து மிதமான சாரல் மழை பெய்தது. இதனையடுத்து நாள் முழுவதும் கனமழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் நகரில் பல சாலைகள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.


இதனிடையே சென்னை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு மற்றும் பெருங்குடி, சென்ட்ரல், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளம் ஆறு போல் ஓடியது. இரண்டு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் பலர் கீழே விழுந்து எழுந்து சென்றதையும் காணமுடிந்தது. அதே சமயம் பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது.


இந்நிலையில், சென்னையில் 4 முக்கிய சுரங்கபாதைகள் இன்று மூடப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News