கனமழை எதிரொலி.. களத்திற்கு நேரடியாக சென்று மக்களையும், கால்நடைகளையும் மீட்கும் ஐஜி.!

கனமழை எதிரொலி.. களத்திற்கு நேரடியாக சென்று மக்களையும், கால்நடைகளையும் மீட்கும் ஐஜி.!

Update: 2020-12-05 13:06 GMT

புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து மீட்பு பணிகளில் பேரிடர் மேலாண்மை குழு ஈடுபட்டு வருகிறது.


இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் ராதாநல்லூர் கிராமத்தில் நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிராமத்தில் பல வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனையறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் பி.வி.ஜெயராம் நேரடியாக சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.


பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமின்றி கால்நடைகளான ஆடு, பசு, கோழி உள்ளிட்டவைகளையும் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு போலீசார் அழைத்து சென்றனர். பொதுமக்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்.
நேரடியாக களத்திற்கு சென்று பொதுமக்களை மீட்டு வரும் ஐஜியை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.
 

Similar News