தமிழக தேர்தல் எதிரொலி.. 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்.!
தமிழக தேர்தல் எதிரொலி.. 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்.!
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் வேகமாக முடுக்கி விட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்களார் இயந்திரம் உள்ளிட்டவை சரிபார்த்தல் போன்ற பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் தேர்தல் பணிகளை கூடுதலாக கவனிப்பதற்காக இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேளாண்துறை இணைச் செயலாளராக இருந்த ஆனந்த் ஐஏஎஸ் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போன்று சுகாதாரத்துறை இணைச் செயலாளராக இருந்த அஜய் யாதவ் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என கூறப்படுகிறது.