பரவைக்காய்ச்சல் எதிரொலி.. தமிழக எல்லையில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு.!

பரவைக்காய்ச்சல் எதிரொலி.. தமிழக எல்லையில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு.!

Update: 2021-01-06 13:07 GMT

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நோய் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கேரளாவில் இருந்து 13 எல்லைகள் வழியாக தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு கால்நடைத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனைச் சாவடியில், கேரளாவில் இருந்து கோழிகள், வாத்து முட்டைகள், இறைச்சி மற்றும் தீவனங்களைக் கொண்டு வரும் வாகனங்கள் மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றன.

மற்ற வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News