பள்ளிகள் திறப்பு எதிரொலி! இந்த பணியை தொடங்கிய மாநகராட்சி ஊழியர்கள்!
பள்ளிகள் திறப்பு எதிரொலி! இந்த பணியை தொடங்கிய மாநகராட்சி ஊழியர்கள்!
தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் (19ம் தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதே போன்று ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
இதன் காரணமாக வகுப்பறையில் 25 பேர் மட்டும் அமரும் வகையில் வகுப்பறைகள் 2ஆக பிரிக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றார்.
மேலும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தப்படுத்தி, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் ஒரு புறம் நடந்து வருகிறது. இந்நிலையில், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவு படி சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும், கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது. இந்த பணியில் துப்புறவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போன்று தான் மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் எவ்விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்று அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது.