புயல் எதிரொலி.. ரேஷன் கடைகளை முன்கூட்டியே திறக்க அமைச்சர் உத்தரவு.!

புயல் எதிரொலி.. ரேஷன் கடைகளை முன்கூட்டியே திறக்க அமைச்சர் உத்தரவு.!

Update: 2020-11-24 09:57 GMT

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தற்போது காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என பெயரிடப்பட்டிருக்கும் நிலையில், புயல் மகாபலிபுரம் புதுச்சேரி இடையே நாளை மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தற்போது நிவர் புயல் சென்னைக்கு 450 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்கவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் 3 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.


இந்நிலையில், ‘நிவர்’ புயலால் பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் ரேஷன் கடைகளை முன்கூட்டியே திறக்கலாம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார். ரேஷன் கடைகளை எப்போது திறக்கலாம் என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்து, கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.


புயல் பாதிக்கும் நேரத்தில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்க வாய்ப்புள்ளது. எனவே பேட்டரியில் இயங்கும் டார்ச் லைட், மெழுகுவர்த்தி உள்ளிட்டவற்றை வாங்கி வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News