பறவைகள் இறப்பு எதிரொலி: காற்றாலைகளில் ஆரஞ்சி நிற பெயிண்ட் அடிக்கக்கோரி வழக்கு.!
பறவைகள் இறப்பு எதிரொலி: காற்றாலைகளில் ஆரஞ்சி நிற பெயிண்ட் அடிக்கக்கோரி வழக்கு.!;
தமிழகத்தில் பொள்ளாட்சி மற்றும் பழனி போன்ற ஊர்களில் காற்றாலை மூலமாக மின் உற்பத்தி அதிகளவு செய்யப்படுகிறது. காற்றாலைகளில் சில சமயங்களில பறவைகள் மோதி அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அது போன்று இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்காக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பறவைகள் மோதாமல் இருக்க தமிழகத்தில் உள்ள காற்றாலைகளில் ஆரஞ்சு நிற பெயிண்ட் அடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய சுற்றுசூழல் பருவநிலையத்துறை செயலர், தமிழக ஆற்றல் துறை செயலர், மின்சார வாரிய சேர்மன் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.