தமிழகத்தில் கல்வித் தொலைக்காட்சி நாளை முதல் தொடக்கம்.!

புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை சார்ந்த காணொலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை (ஜூன் 19) தொடங்கி வைக்க உள்ளார்.

Update: 2021-06-18 05:46 GMT

கல்வித் தொலைக்காட்சியில் இந்த கல்வியாண்டுக்கான பாடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் புதிதாக கல்வித் தொலைக்காட்சியை தொடங்கி அதன் மூலம் பாடங்களை நடத்தி வந்தது. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை கவனித்து வந்தனர். அதே போன்று இந்த ஆண்டும் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் குறைந்த பாடில்லை.




 


இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறும்போது, கொரோனா தாக்கம் நீடிப்பதால் பள்ளிகள் தற்போது திறக்க வாய்ப்பில்லை எனக் கூறினார். மேலும், மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை சார்ந்த காணொலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை (ஜூன் 19) தொடங்கி வைக்க உள்ளார்.

Similar News