முட்டை விலை மூன்று நாட்களாக உயர்வு: காரணம் இதுதானாம்.!

முட்டை விலை மூன்று நாட்களாக உயர்வு: காரணம் இதுதானாம்.!;

Update: 2021-02-11 14:51 GMT

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களாக முட்டை விலை 30 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த 8ம் தேதி 10 காசுகள் உயர்ந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் 20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது வெயில் அதிகரிக்கும் காரணத்தினால் முட்டை உற்பத்தி 10 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே முட்டை விலை உயர்ந்து வருகிறது என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமும் முட்டை சாப்பிடுவதற்கே ஒரு பட்டாளமே உள்ளது. குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என முட்டையை தினமும் சாப்பிட்டு வருகின்றனர். சிலருக்கு உணவே முட்டையாகவும் கூட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலையேற்றத்தால் முட்டை பிரியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
 

Similar News