"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்" அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை! முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதா?

Update: 2022-01-19 09:48 GMT

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதற்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அதன்படி அடுத்த மாதத்தில் தேர்தல் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக சென்னை, கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். விரைவில் தேர்தல் தேதி அறிவிப்புகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News