ஊரக உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை!
கடந்த அதிமுக ஆட்சியில் நெல்லை மாவட்டம் பிரிக்கப்பட்டு தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரும் தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவைகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இது குறித்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் 15ம் தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், 9 மாவட்டங்களில் ஊரக, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம் சென்னை, கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi
https://www.dailythanthi.com/News/TopNews/2021/09/06054614/Election-Commission-today-consulted-with-9-district.vpf