தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் துணை ராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு.!
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
தேர்தல் அமைதியான முறையில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து செல்கிறது.
இந்நிலையில், திருப்பத்தூரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று துணை ராணுவம் மற்றும் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி இன்று காவல்துறை மற்றும் துணை ராணுவம் சார்பில் கொடி அணிவக்குப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது.