சென்னையில் இன்று முதல் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு.!
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று முதல் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை ரயில்வே கோட்டம் மின்சார ரயில் சேவையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 7ம் தேதி முதல் 208ஆக இருந்த மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கை 279ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று ஜூன் 14ம் தேதி முதல் மேலும் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.