மேட்டூர் அருகே அரை டன் பனம்பழம் தின்ற காட்டு யானை உயிரிழப்பு.!

யானையின் தந்தங்களை அகற்றிய கால்நடை மருத்துவர்கள், யானையை அதே இடத்தில் குழிதோண்டு புதைத்தனர். பனம்பழம் தின்ற யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-29 03:35 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே சுமார் அரை டன் அளவுக்கு பனம்பழம் தின்றதால் 22 வயது மதிக்கத்தக்க காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

மேட்டூர் முத்துமாரியம்மன் கோயில் சாம்பார் பள்ளம் ஏரி காப்புக்காட்டில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து கால்நடை மருத்துவர்களுடன் வனத்துறையினர் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது உடற்கூராய்வு செய்ததில், அந்த காட்டு யானை சுமார் அரை டன் அளவுக்கு பனம்பழம் தின்றுள்ளது. இதன் காரணமாக செரிமானம் ஆகாமல் வயிறு உப்பி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.


இதனை தொடர்ந்து யானையின் தந்தங்களை அகற்றிய கால்நடை மருத்துவர்கள், யானையை அதே இடத்தில் குழிதோண்டு புதைத்தனர். பனம்பழம் தின்ற யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News