நீலகிரியில் ஆசிட் ஊற்றி யானை கொலை? குற்றவாளிகளுக்கு வலை வீசும் போலீஸ்!

நீலகிரியில் ஆசிட் ஊற்றி யானை கொலை? குற்றவாளிகளுக்கு வலை வீசும் போலீஸ்!

Update: 2021-01-20 18:28 GMT

தமிழகத்தில் சமீபகாலமாக யானைகள் இறப்பு அதிகரித்துள்ளது. இதில் இயற்கை உயிரிழப்பு செயற்கை உயிரிழப்பு என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானை ஒன்று கடக்க முயன்றபோது சரக்கு லாரி மோதியது. இதில் யானைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதன் பின்னர் யானைக்கு பெங்களூரு பன்னாரகட்டா உயிரியல் பூங்கா மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

அதே போன்று கோவையில் கடந்த மாதம் வயல்வெளியை கடக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இந்த சோகம் மறைவதற்குள் தற்போது மற்றொன்று யானை உயிரிழந்துள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம், மசினகுடியில் யானை ஒன்று படுகாயங்களுடன் துடித்து கொண்டிருந்த யானை நீலகிரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது.

பிரேதபரிசோதனை முடிவில் யானை பெட்ரோல் அல்லது ஆசிட் ஊற்றி கொடூரமாக தாக்கியதால் உயிரிழந்திருக்கலாம் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News