மத்திய அரசு பாதுகாத்து வரும் 4 தமிழக கோவில்களில் ஆக்கிரமிப்புகள்: மத்திய அரசு தகவல்!

எம்.பி. ஒருவர் ஆக்கிரமிப்பு பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நாட்டில் மொத்தம் 1097 புராதன இடங்களை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளது.

Update: 2021-11-29 09:59 GMT

தமிழகத்தில் 412 கோயில்களை மத்திய அரசு பாதுகாத்து வருகிறது. அது போன்று கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருவதை மத்திய அரசு தடுத்து வருகிறது.

அது போன்று காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள தேனுபுரீஸ்வரர் கோயில் திருச்சியில் உள்ள எறும்பீஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளிட்டவைகள் மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட தளங்களாக அறிவிக்கப்பட்டு அதனை பராமரித்து வருகிறது. இதனிடையே மத்திய அரசு பராமரிப்பில் உள்ள 4 கோயில்களில் ஆக்கிரமிப்பு புகார்கள் வந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதனிடையே எம்.பி. ஒருவர் ஆக்கிரமிப்பு பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நாட்டில் மொத்தம் 1097 புராதன இடங்களை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 412 கோயில்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக இருக்கின்ற நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மற்றும் தென்னேரியில் உள்ள ஆபத்சஹோயேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள எறும்பீஸ்வரர் சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஐராதீஸ்வரர் திருக்கோயில் ஆகியவை ஆக்கிரமிப்பு புகார்கள் வந்துள்ளது. எனவே ஆக்கிரமித்தவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News